காஷ்மீர் சுற்றுலாத் துறையை மேம்படுத்த விழா; கடுங்குளிரில் வீரர்களின் இசை நிகழ்ச்சி

கடும் குளிரில் ராணுவ வீரர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Update: 2022-03-05 16:37 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்திய ராணுவத்தின் ‘டேகர் பிரிவு’ காஷ்மீர் சுற்றுலாத்துறையுடன் இணைந்து, 3 நாட்கள் நடைபெறும் குளிர்கால விழாவில் பங்கேற்றது. சுற்றுலாத்துறையையும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.

இதில் பிற பகுதிகளைச் சேர்ந்த நடிகர்கள், பாடகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கடும் குளிரில் ராணுவ வீரர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

மேலும் செய்திகள்