4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சி அமைப்போம்; ஜே.பி. நட்டா நம்பிக்கை

பா.ஜ.க. 4 மாநிலங்களில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Update: 2022-03-05 13:10 GMT




புதுடெல்லி,



உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. வருகிற 7ந்தேதி 7ம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு அன்றைய தினம் பொது விடுமுறை விடப்படுகிறது.  உத்தர பிரதேசத்தில் வாரணாசிக்கு உட்பட்ட  வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கன்டோன்மெண்ட் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  மொத்தம் 9 மாவட்டங்களில் 54 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.  வருகிற 10ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.  இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறந்த முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டோம்.  பா.ஜ.க. சார்பில் வாக்களித்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.  உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், கோவா மற்றும் மணிப்பூரில் எங்களுடைய அரசை மீண்டும் பெரும்பான்மையுடன் கொண்டு வர மக்கள் முடிவு செய்துள்ளனர் என கூறியுள்ளார்.



மேலும் செய்திகள்