உ.பி.யில் 80% இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் 80% இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.

Update: 2022-03-03 02:49 GMT
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மேலும் 2 கட்ட தேர்தல் மட்டுமே மீதமுள்ளது. குறிப்பாக பூர்வாஞ்சல் பகுதிக்கு உட்பட்ட 111 தொகுதிகளை தவிர மீதமுள்ள 292 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்து உள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 6-வது கட்டமாக நடைபெறும் 57 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உத்திர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது வாக்கை பதிவு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் மக்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். பிரதமர் மோடி தலைமையில் பாஜக சாதனை படைக்கும் மற்றும் அதிக இடங்களை கைப்பற்றும். மாநிலத்தில் 80 சதவீததிற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

மேலும் செய்திகள்