பெங்களூரு-ஓசூர் ‘மெமு’ ரெயில் இன்று ரத்து - தென்மேற்கு ரெயில்வே தகவல்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பெங்களூரு-ஓசூர் ‘மெமு’ ரெயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-18 19:27 GMT
பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“பெங்களூரு பையப்பனஹள்ளி-லெட்டேகொல்லஹள்ளி இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் கே.எஸ்.ஆர். பெங்களூரு-ஓசூர் ‘மெமு’ ரெயில் (வண்டி எண்: 06261) பெங்களூருவில் இருந்து இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், சேலம்-யஷ்வந்தபுரம் தினசரி பயணிகள் சிறப்பு ரெயில் (07316) இன்று முதல் அடுத்த மாதம் 9-ந்தேதி வரை ஓசூர் வரை மட்டும் இயக்கப்படும்.”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்