காஷ்மீரில் பாதுகாப்பு நிலை குறித்து அமித்ஷா ஆய்வு
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு நிலை, மேம்பாட்டு பணிகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு செய்தார்.
புதுடெல்லி,
காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதி, கட்டுப்பாட்டு கோட்டு பகுதி தொடர்பாகவும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.மேம்பாட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதுதொடர்பான கூட்டத்தில், காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தலைமைத் தளபதி முகுந்த் நரவனே, மத்திய மற்றும் யூனியன் பிரதேச உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.