15-18 வயது வரம்பில் 2 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: மத்திய சுகாதாரத்துறை மந்திரி

18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே இந்தியாவில் போடப்பட்டு வருகிறது.

Update: 2022-02-18 10:28 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பேராயுதமாக தடுப்பூசி பயன்படுகிறது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

தொற்று பரவல் அதிகரிப்பால் கடந்த  ஜனவரி 3 ஆம் தேதி 15-18 வயதில் உள்ள இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே இந்தியாவில் போடப்பட்டு  வருகிறது. 

15-18 வயது வரம்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் , இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்