தேசிய நெடுஞ்சாலை விபத்து: 4 போலீசார் உட்பட 5 பேர் பலி! ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்
டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நிஜார் மோர் அருகே ஜெய்ப்பூரில் உள்ள பாப்ரு பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
ஜெய்ப்பூர்,
டெல்லியில் இருந்து குஜராத்திற்கு ஒரு குற்றவாளியை அழைத்துக்கொண்டு 4 போலீசார் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான நிஜார் மோர் அருகே ஜெய்ப்பூரில் உள்ள பாப்ரு பகுதியில் அவர்களது வாகனம் வந்த போது வாகன்ம் சாலை விபத்தில் சிக்கியது இதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சாலை விபத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலர் மன்சுக் பாய் மற்றும் காவலர்கள் இர்பான் பதான், பீகா முகேரா மற்றும் ஷக்ரி சிங் கோல் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி சீலம்பூரைச் சேர்ந்த சயீன் என்ற முன்னா ஆகியோர் பலியானார்கள்.
விபத்தில் பலியானவர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியில், “ஜெய்ப்பூரில் உள்ள பாப்ரு பகுதியில் குஜராத் காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கி 4 போலீசார் உட்பட 5 பேர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும் மற்றும் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.
दिल्ली से गुजरात अभियुक्त लेकर जा रही गुजरात पुलिस का वाहन जयपुर के भाबरू क्षेत्र में दुर्घटनाग्रस्त होने से 4 पुलिसकर्मियों सहित 5 लोगों की मृत्यु की जानकारी दुखद है। शोकाकुल परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं, ईश्वर उन्हें सम्बल दें एवं दिवंगतों की आत्मा को शांति प्रदान करें।
— Ashok Gehlot (@ashokgehlot51) February 15, 2022