நியூட்ரினோ திட்டம்: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்யக் கோரும் மேல்முறையீட்டு மனு

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2022-02-14 20:05 GMT

இந்த மனுவை வினீத் சரண், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி, இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக விளக்கமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம் தேவை என வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கூடுதல் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருநாள் அவகாசம் அளிக்கிறோம். அதற்கு பிப்ரவரி 18-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ வாதங்களை 2 அல்லது 3 பக்கங்களில் பிப்ரவரி 18-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணையை பிப்ரவரி 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என தெரிவித்தனர்.

தேசிய வனவிலங்கியல் வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி தீர்ப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்