கேரளாவில் புதிதாக 8,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,16,372 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் இன்று 25 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 153 உயிரிழப்புகள் தற்போது மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்படி இன்றைய உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 62,377 ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 24,757 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,08,837 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது 1,44,384 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.