கர்நாடகத்தில் புதிதாக 2,372 பேருக்கு கொரோனா

பெங்களூருவில் 1,059 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 2.31 ஆக குறைந்துள்ளது.

Update: 2022-02-13 14:46 GMT

பெங்களூரு, 

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில்  ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 279 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 2,372 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 1,059 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 2.31 ஆக குறைந்துள்ளது. 

இது பெங்களூருவில் 2.79 என்ற அளவில் உள்ளது. மாநிலத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 395 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 697 ஆக குறைந்துள்ளது. 

இதில் பெங்களூருவில் 14 ஆயிரம் பேர் உள்ளனர். கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் பெங்களூரு நகரில் 7 பேர் இறந்தனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்