விவசாயிகளின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது - பிரதமர் மோடி

விவசாயிகளின் வேதனையை தான் புரிந்துகொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-09 16:00 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், நான் விவசாயிகளின் மனதில் இடம்பிடிக்க வந்தேன். அவர்களின் மனதில் நான் இடமும் பிடித்துவிட்டேன். சிறு விவசாயிகளின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டது என நான் கூறினேன். ஆனால், அந்த வேளாண் சட்டங்களும் நாட்டு நலனை கருத்தி கொண்டு திரும்பப்பெறப்பட்டது.

மக்களுக்கு சேவை செய்வதில் பாஜக எப்போதும் முனைப்பாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருக்கும் இருக்கும்போது, அனைவரின் முயற்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்ற தாரக மந்திரம் மூலம் செயல்பட்டு வருகிறோம். பாஜக அலையை நான் அனைத்து மாநிலங்களிலும் பார்க்கிறேன். 5 மாநில மக்களும் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு தருவார்கள். பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றிபெறுவோம்’ என்றார். 

மேலும் செய்திகள்