கங்கை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலங்கள் குறித்த தரவுகள் இல்லை - மத்திய அரசு விளக்கம்
தேசிய தூய்மை கங்கா திட்டம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ராஜ்ய சபாவில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரயன், கங்கை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலங்கள் குறித்து கேள்வியை எழுப்பினார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய ஜல்சக்தி துறையின் இனை மந்திரி பிஷ்வேஷ்வர் துடு தெரிவித்துள்ளதாவது,
“கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் மிதப்பதாகவும் புதைக்கப்பட்டதாகவும் சில செய்திகள் வெளி வந்தன. ஆனால் கங்கை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலங்கள் குறித்த தரவுகள் இல்லை. இது குறித்து தேசிய தூய்மை கங்கா திட்டம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நமாமி கங்கா திட்டத்துக்காக ரூ.126 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பதில் அளித்தார்.