கர்நாடகத்தில் போராட்டத்தின் போது கல்வீச்சில் மாணவரின் மண்டை உடைந்தது

கர்நாடகத்தில் கல்லூரிக்கு பர்தா, காவி துண்டு அணிந்து வரும் போராட்டத்தின் போது நடந்த கல்வீச்சில் மாணவரின் மண்டை உடைத்தது.

Update: 2022-02-08 06:42 GMT
பெங்களூரு,

கல்லூரிக்கு பர்தா, காவி துண்டு அணிந்து வரும் விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பூதாகரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் இன்று நடக்க உள்ள நிலையில் கடலோர மாவட்டமான உடுப்பியில் உள்ள சில கல்லூரிகளில் முஸ்லிம், இந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

இதில் வடகர்நாடக மாவட்டமான பாகல்கோட்டையில் உள்ள பெரப்பரனபட்டியில் உள்ள அரசு கல்லூரியில் இன்று காலை நடந்த போராட்டத்தின் போது கல்வீச்சு நடந்தது. இதில் ஒரு மாணவர் காயம் அடைந்தார். இதுபோல மலைநாடு மாவட்டமான சிவமொக்காவில் நடந்த போராட்டத்தின் போது கல்வீச்சில் ஒரு மாணவரின் மண்டை உடைந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்