லதா மங்கேஷ்கர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் காலை முதல் அஞ்சலி

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Update: 2022-02-07 04:58 GMT
மும்பை,

இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியதையடுத்து,  இரவு 7 மணி அளவில் முப்படைகள் மற்றும் மாநில அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே மராட்டியத்தில் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் இன்று காலை முதல் சாரை சாரையாக வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

லதா மங்கேஷ்கர் நினைவாக மத்திய பிரதேச முதல்-மந்திரி எஸ்.எஸ்.சவுகான்
மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

"லதா ஜி இந்தூரில் பிறந்தார், எனவே இந்தூரில் ஒரு மியூசிக் அகாடமி, மியூசிக் யுனிவர்சிட்டி, மியூசியம் & திரு உருவ சிலை நிறுவப்படும். லதா மங்கேஷ்கர் விருது அவரது பிறந்தநாளில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்