கேரளா; வெளிநாட்டு பயணிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

கேரளாவிற்கு வரும் அனைத்து சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் வீட்டிலேயே தனிமையில் இருந்து அறிகுறிகளைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2022-02-05 11:11 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,684- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,037-பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 28-பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில்,  வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

கேரள அரசின் சுற்றறிக்கையின்படி,  “அனைத்து சர்வதேச பயணிகளும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் கேரளா வந்த நாளிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு தங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

மேலும் அவர்களுக்கு அறிகுறிகள் தோன்றினால், அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டிலேயே தனிமையில் இருந்து அறிகுறிகளைக் கண்காணிக்கவும். பிசிஆர் சோதனைக்குப் பிறகு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட அனைத்து சர்வதேச பயணிகளின் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,20,496 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்