உ.பி. சட்டசபை தேர்தல் - கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் வேட்பு மனு தாக்கல்

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

Update: 2022-02-04 09:12 GMT
லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக  சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம் என்பதால், உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. 

ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.  சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து ஆளும் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி எஸ்.பி. சிங் பாகெல் போட்டியிடுகிறார். 

உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உள்துறை மந்திரி அமித்ஷா உடனிருந்தார். முன்னதாக கோரக்நாத் கோயிலில் யோகி ஆதித்யநாத் பிரார்த்தனை செய்தார்.

மேலும் செய்திகள்