முதலிரவு முடிந்த கையோடு நகை-மொய் பணத்துடன் மாப்பிள்ளை ஓட்டம் - முதல் மனைவியின் வீட்டில் இருந்த போது போலீசில் சிக்கினார்..!

முதலிரவு முடிந்த கையோடு புதுப்பெண்ணின் 30 பவுன் நகை மற்றும் மொய்பணத்துடன் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தார். அவர் முதல் மனைவியின் வீட்டில் பதுங்கி இருந்த போது போலீசில் சிக்கினார்.

Update: 2022-02-02 23:55 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை மாவட்டம் காயங்குளத்தை சேர்ந்தவர் ரஷீத். இவருடைய மகன் அசாருதீன் (வயது 30). இவருக்கும், பத்தனம் திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் கடந்த 30-ந் தேதி அங்குள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது.

புதுமணத்தம்பதிக்கு மணப்பெண் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இளம்பெண் தனது கணவருடன் காலை வரை ஒன்றாக இருக்க போவதை நினைத்து குதூகலத்துடன் முதலிரவு அறைக்கு சென்றார். புதுமண தம்பதி ஒருவருக்கொருவர் பேசி, பழகி இரண்டற கலந்தனர். இளம்பெண் தன் வாழ்நாளின் இனிமையான நேரத்தை ரசித்து கொண்டு இருந்தார்.

இந்தநிலையில் அதிகாலை 3 மணிக்கு அசாருதீன் தனது புதுமனைவியிடம், தனது நண்பன் ஆலப்புழை அருகே விபத்தில் சிக்கி விட்டதாகவும், அவருக்கு அத்தியாவசிய உதவி தேவைப்படுவதால் தான் உடனடியாக அங்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து பெண் வீட்டார் அவரது பேச்சை நம்பி அனுப்பி வைத்தனர். பின்னர் அதிகாலை 4 மணியளவில், அசாருதீனை போனில் தொடர்பு கொண்டு பெண் வீட்டார் பேசினார்கள். அப்போது தான் ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றதாகவும், சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுவதாகவும் கூறினார்.

ஆனால் காலை விடிந்து வெகு நேரம் ஆன பிறகும் அசாருதீன் வீட்டிற்கு வந்தபாடில்லை. இதனால் சந்தேகம் அடைந்த புதுப்பெண் தனது கணவருக்கு மீண்டும் போன் செய்தார். அப்போது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த, இளம்பெண்ணின் வீட்டார் முதலிரவு நடந்த அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்தனர். அப்போது அதில் வைத்து இருந்த 30 பவுன் நகை மற்றும் திருமணத்தின் போது உறவினர்கள் வழங்கிய மொய் பணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆகியவை மாயமானது தெரியவந்தது.

அதை தொடர்ந்து அடூர் போலீசில் பெண் வீட்டார் புகார் செய்தனர். உடனே போலீசார் தீவிர விசாரணையில் இறங்கிய போது அசாருதீனுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழையை அடுத்த அரிப்பாட்டை சேர்ந்த ஒரு இந்து பெண்ணுடன் திருமணம் நடந்ததும், அதை மறைத்து அசாருதீன், 2-வது திருமணம் செய்ததும் தெரியவந்தது. அதேநேரம் முதலிரவு முடிந்த கையோடு 30 பவுன் நகை மற்றும் ரூ.2¾ லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த அசாருதீன் முதல் மனைவியின் வீட்டில் பதுங்கி இருக்கிறார் என்ற திடுக்கிடும் தகவலும் தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அரிப்பாட்டில் உள்ள முதல் மனைவியின் வீட்டிற்கு போலீசார் சென்று, அங்கிருந்த அசாருதீனை கைது செய்தனர்.

அசாருதீனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விவரம் தங்களுக்கு தெரியாது என்று பெண் வீட்டார் கூறினார்கள். முதல் திருமணத்தை மறைத்து, 2-வது திருமணம் செய்ததுடன் நகை-பணத்தை எடுத்து சென்றது குறித்து புதுமாப்பிள்ளை அசாருதீனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்