தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி - சுகாதாரத்துறை உத்தரவு
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கிறது.
பெங்களூரு,
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் பணிக்கு கர்நாடகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட முன்கள பணியாளர்கள், 60 வயதை தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கு 39 வாரங்கள் ஆன பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இன்றி பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.