மராட்டியத்தில் ஒரே பள்ளியில் 48 மாணவர்களுக்கு கொரோனா

48 மாணவர்களுக்கும், 3 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது

Update: 2021-12-26 23:27 GMT
புனே, 

மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் தகாலி தோகேஷ்வர் கிராமத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து அந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 48 மாணவர்களுக்கும், 3 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்