முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: பிரதமர் மோடி
ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
- உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது
- நாம் அனைவரும் 2022- ஆம் ஆண்டுக்காக தயாராகி கொண்டு இருக்கிறோம்.
- ஒமைக்ரான் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
- இந்தியாவிலும் பலருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஒமைக்ரானை கண்டு பீதி அடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள்
- இந்தியாவில் 18 லட்சம் கொரோனா படுக்கைகள் தயாராகி உள்ளன.
- முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவதை மறந்துவிடக்கூடாது.
- அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- தடுப்பூசி செலுத்தும் திட்டம் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
- மாநிலங்களிடம் கூடுதலான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
- கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை, என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- தடுப்பூசியின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைத்து வருகின்றன.
- நமது தடுப்பூசி திட்டம் விஞ்ஞான அடிப்படையிலானது.
- உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
- கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொடர்ந்து நாம் முன்னணியில் இருக்கிறோம்.
- இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
- முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
- இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.