கர்நாடகாவில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

கர்நாடகாவில் டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-21 12:19 GMT
பெங்களூரு,

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கர்நாடகாவில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் 50 சதவிகித இருக்கை வசதியுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்களில் வழக்கமான பிரார்த்தனைகள் நடைபெற கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் செய்திகள்