பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்...!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Update: 2021-12-21 02:27 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த டிசம்பர் 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்  நடந்தது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வருகை குறித்து கவலை தெரிவித்த அவர், அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் விரைவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில், பா.ஜ.க. தனது பாராளுமன்ற கட்சியின் கூட்டத்தை இன்று நடத்த உள்ளது. முன்னதாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்து பா.ஜ., உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23ஆம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்