தர்மசாலா: தலாய்லாமாவுடன், மோகன் பகவத் சந்திப்பு

தலாய்லாமாவை தர்மசாலாவில் உள்ள அவரது இல்லத்தில் மோகன் பகவத் சந்தித்து பேசினார்.

Update: 2021-12-21 01:31 GMT
தர்மசாலா,

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இமாசலபிரதேசத்தில் 5 நாள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று அவர் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவை தர்மசாலாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

மேலும் திபெத் நாடு கடந்த அரசின் அதிபர் பென்பா செரிங், அவரது மந்திரிசபை சகாக்கள் மற்றும் சபாநாயகர் சோனம் தெம்பெல் ஆகியோரையும் மோகன் பகவத் சந்தித்தார்.

தலாய்லாமாவுடன் நடந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் மனித குலத்தின் நலன் சார்ந்த அம்சங்களை இருவரும் விவாதித்திருக்கலாம் என பென்சா செரிங் கூறினார்.

மேலும் செய்திகள்