18 வயதில் பிரதமரை தேர்வு செய்யலாம்...ஆனால் திருமணம் செய்யக் கூடாதா?" - அசாதுதீன் ஒவைசி கேள்வி
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவை அசாதுதின் ஓவைசி கடுமையாக சாடியுள்ளார்.
ஐதராபாத்,
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மசோதாவாக நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக அமலுக்கு வர உள்ளது.
இந்த நிலையில், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவை கடுமையாக சாடியுள்ள அசாதுதின் ஓவைசி, 18-வயதில் நாட்டின் பிரதமரையே தேர்வு செய்யும் பொழுது திருணம் செய்யக்கூடாதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், குழந்தைகளின் திருமணத்தை தடுக்க சட்டம் இருந்தாலும் அதை தடுக்க முடியவில்லை. பெண்களுக்கு கல்வி, பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதே தேர்வு. எனவே, பெண்கள் மற்றும் ஆண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணையிக்க வேண்டும் எனவும் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.