நாட்டுக்காக 32 தோட்டாக்களை சுமந்தவர் இந்திரா காந்தி - ராகுல்காந்தி
உண்மைகளைக் கண்டு இந்த அரசு பயப்படுகிறது என உத்தரகாண்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காத்மண்டு,
வங்கதேச போர் வெற்றி நாள் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது. ஆனால் நாட்டுக்காக 32 தோட்டாக்களை சுமந்தவர் இந்திராகாந்தி, 1971-ம் ஆண்டு போர் நினைவு நிகழ்ச்சியில் இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஏன் என்றால் மத்திய அரசு உண்மைகளை கண்டு பயப்படுகிறது.
1971 போரில் பாகிஸ்தான் 13 நாட்களுக்குள் தலை குனிந்தது. பொதுவாக, ஒரு போர் 6 மாதங்கள், 1-2 ஆண்டுகள் நடக்கும். ஆப்கானிஸ்தானை தோற்கடிக்க அமெரிக்கா 20 வருடங்கள் எடுத்தது ஆனால் இந்தியா ஒன்றுபட்டு ஒரே நாடாக நின்றதால் பாகிஸ்தானை 13 நாட்களில் தோற்கடிக்க முடிந்தது.