மும்பையில் நடைபெற இருந்த ராகுல்காந்தி பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு
மும்பையில் நடைபெற இருந்த ராகுல்காந்தியின் பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை மாநகராட்சி தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் நிலையில், மும்பையில் வருகிற 28-ந் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ராகுல்காந்தியின் பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும், நிலைமை சீரடைந்த பிறகு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் கூறியுள்ளார்.