டெல்லியில் அடுத்த ஆண்டு முதல் இலவச யோகா வகுப்புகள்; முதல்-மந்திரி அறிவிப்பு
டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
புதுடெல்லி,
டெல்லி செயலகத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசும்போது, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தலைநகர் டெல்லியில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதன்படி, யோகசாலா திட்டத்தின் கீழ், நம்மிடம் இருப்பிலுள்ள 400 யோகா பயிற்றுனர்களின் உதவியுடன், டெல்லியில் குறைந்தது 20 ஆயிரம் பேர் யோகா பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளில், நிர்வாகத்தில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. டெல்லியில் நிறைய மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை உருவாக்கி, சுகாதார துறையில் சீர்திருத்தம் உருவாக்கி உள்ளோம்.
நாம் மீண்டுமொரு புதிய பொதுநல திட்டம் ஒன்றை அறிமுகம் செய்கிறோம். இதன்படி, ஒரு படி முன்னே சென்று டெல்லி மக்கள் வியாதியில் சிக்காமல் இருக்கும் வகையில், அதற்கு முன்பே தடுப்பதற்கான நடவடிக்கையாக இது அமையும் என அவர் கூறியுள்ளார்.