மக்களே எனது தெய்வங்கள்: வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்கிறார் பாரதி என பிரதமர் மோடி பேசினார்.

Update: 2021-12-13 15:04 GMT
வாரணாசி, 

புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை இன்று திறந்த வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

காசி விஸ்வநாதர் கோவிலின் இருண்ட பக்கம் தற்போது முடிவடைந்துள்ளது. 3000 சதுர அடியில் இருந்த காசி விஸ்வநாதர் கோவில் வளாகம், தற்போது 5 லட்சம் சதுர அடியாக மாறியுள்ளது. இப்போது, ​​50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கும் அதன் வளாகத்திற்கும் வரலாம்.

வாரணாசியை பலர் கேலி செய்தனர். ஆனால் நோக்கம் சரியாக இருந்தால் முடியாதது எதுவும் இல்லை. கோவில்கள் ,மருத்துவ கல்லூரிகள் அதிகம் உருவாக்கி வருகிறோம். இன்றைய புதிய அமைப்பு சிவன் அருளால் நடந்தேறியுள்ளது. என்னை பொருத்தவரை மக்களே என்னுடைய தெய்வங்கள். காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்கிறார் பாரதி ”என்றார். 

மேலும் செய்திகள்