வருண் சிங் உடல் நிலை சீராக உள்ளது : விமானப்படை

வருண் சிங் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும் உடல் நிலை சீராகவே இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-12-11 13:27 GMT
பெங்களூரு,

கடந்த 8 ஆம் தேதி நீலிகிரி மாவட்ட குன்னூரில் காட்டேரி எனும் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், 11 வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர் பெங்களூருவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில், வருண் சிங் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கவலைக்கிடமாக இருந்தாலும், உடல் நிலை சீராக இருப்பதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்