உறுப்பினர் கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்லுங்கள் - மத்திய மந்திரிக்கு சபாநாயகர் அறிவுரை
உறுப்பினர் கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்லுங்கள் என்று மத்திய மந்திரிக்கு சபாநாயகர் அறிவுரை வழங்கியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் இன்று கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் 2-ம் கட்ட கடனுக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்? என ராஜஸ்தான் மாநிலம் பிஹில்வாரா தொகுதி பாஜக எம்.பி. சுபாஷ் சந்திர பகிரா கேள்வி எழுப்பினார்.
அவை உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை மந்திரி பஹ்வாந்த் கிருஷ்ணா ராவ், முதல் முத்ரா கடன் திட்டம் ஷிஹூ கடன் எனவும் இரண்டாவது முத்ரா கடன் கிஷோர் மற்றும் தரன் என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2-வது கட்ட கடன் பெற விண்ணப்பித்தோர் குறித்த தகவல்களை சேகரித்து உங்களிடம் (சுபாஷ் எம்.பி) அளிக்கிறேன்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த அவை எதற்கு உள்ளது... நீங்கள் தவல்களை சேகரித்தால் அதை இங்கு (நாடாளுமன்றத்தில்) பகிருங்கள். உறுப்பினர் கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்லுங்கள்’ என்றார்.