வங்கக் கடலில் உருவானது ஜவாத் புயல்; 95 ரெயில்கள் ரத்து

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-03 10:28 GMT
புவனேஷ்வர், 

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  கூறியிருந்தது.

இந்த நிலையில், தற்போது வங்கக் கடலில் ஜாவத் புயல் உருவானதாகவும் இது மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதாகவும் டிசம்பர் 5 ஆம் தேதி வடக்கு ஆந்திரா- ஒடிசா இடையே புயல் கரையைக் கடக்கும் எனவும் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

புயல்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஒடிசாவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜவாத் புயல் எச்சரிக்கை எதிரொலியாக ஒடிசா கடற்கரை மார்க்கமாக செல்லும் 95 ரெயில்களின் சேவையை மூன்று நாட்களுக்கு ரத்து செய்து  ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதியே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்