அகாலி தளம் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா பா.ஜ.கவில் சேர்ந்தார்
பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் மாற்றங்கள் பரபரப்பாக அரங்கேறி வருகின்றது.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் மாற்றங்கள் பரபரப்பாக அரங்கேறி வருகின்றது. இந்நிலையில், சிரோமனி அகாலி தளம் கட்சியின் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார்.
அவர் டெல்லி சீக் குருத்வாரா மேலாண்மை கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து இன்று விலகினார். அதன்பின், பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக குருத்வாரா மேலாண்மை கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக கூறியுள்ளார்.
மேலும், வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை விட்டு தான் ஒதுங்கி இருக்கப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
பா.ஜ.கவின் தலைவர் ஜேபி நட்டா, சிர்சாவை வரவேற்று வாழ்த்தியுள்ளார். நட்டா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அவருடைய அனுபவமும் கடின உழைப்பும் பா.ஜ.கவை மேலும் வலுப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.