இந்தியாவில் இதுவரையில் 16.25 கோடி பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் இதுவரையில் 16.25 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவை கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கி பயன்பாட்டில் இருந்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை நாட்டில் 16 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 339 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
18-44 வயது பிரிவினரில் 12 மாநிலங்களில் 9 லட்சத்து 4 ஆயிரத்து 263 பேர் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். இந்தப் பிரிவினரில் தமிழகத்தில் 6,415 பேர் தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுள்ளனர்.