டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாட்டியாலாவில் கடந்த மாதம் நடந்த 24 வது தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற 313 பேருக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 5 பேர் ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இருந்ததாகவும், இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்படாத நிலையில் தொற்று ஏற்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.