முதல்-மந்திரி எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்

முதல் மந்திரி எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தல்

Update: 2021-03-31 21:06 GMT
பெங்களூருள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது துறையில் தலையிடுவதாக கிராம வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் மந்திரி ஈசுவரப்பா பரபரப்பு புகாரை கூறியுள்ளார். 

இதுகுறித்து பா.ஜனதா மேலிடம் மற்றும் கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மீது மூத்த மந்திரி ஒருவர் தீவிரமான புகாரை கவர்னருக்கு தெரிவித்துள்ளார். அதனால் எடியூரப்பா உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அந்த புகாரில் உண்மை இல்லை என்றால் அந்த மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கர்நாடக பா.ஜனதா அரசில் ஊழல் மலிந்துவிட்டது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்