கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வ்ருகிறது. இதுவரை மொத்தம் 2 கோடி 30 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான எல்.கே. அத்வானி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 93 வயதான எல்.கே. அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது.