கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு ; குற்றவாளிகள் 9 பேருக்கு மரண தண்டனை 4 பேருக்கு ஆயுள்

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு மரண தண்டனையும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2021-03-06 06:26 GMT
பாட்னா

கடந்த 2016ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்தனர். இது தொடரபாக போலீசார்  4 பெண்கள் உள்பட  14 பேரை கைது  செய்தனர். இது தொடர்பான வழக்கு  கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடிபெற்று வந்தது.

இஅத வழக்கில்  நீதிபதி லவகுச குமார் தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு  நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி லவகுச குமார் தீர்ப்பளித்துள்ளார்.  ஒருவர் காலமாகி விட்டார்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்