திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் குழு இன்று கூடுகிறது

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டம் அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

Update: 2021-03-05 07:33 GMT
கொல்கத்தா:-

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் முக்கிய கட்சிகளாக உள்ளன. 

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அக்கட்சி தலைவரும் மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை திரிணாமுல் காங்கிரஸ் எவ்வாறு சந்திப்பது, கட்சியின் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்