தொலைத்தொடர்பு அலைக்கற்றைகள் ரூ.77,814.80 கோடிக்கு ஏலம்

தொலைத்தொடர்பு அலைக்கற்றைகள் ரூ.77,814.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

Update: 2021-03-03 00:39 GMT
புதுடெல்லி,

தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. 7 வித வரிசைகளில் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டன. ஒட்டுமொத்தமாக ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான 2,250 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டன. 

தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. ஏலம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் அன்ஷு பிரகாஷ் கூறுகையில், 2 நாள்கள் நடைபெற்ற ஏலத்தில் 855.60 மெகா ஹெர்ட்ஸ் மதிப்பிலான அலைக்கற்றைகள் ரூ.77,814.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஏலம் விடப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 37 சதவீதம் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. ஏலம் விடப்பட்ட அலைக்கற்றை 20 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்