கேரள மீன்பிடி உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்

கேரள மீன்பிடி உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

Update: 2021-03-01 13:50 GMT
எர்ணாகுளம் துறைமுகம் பகுதியில் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காட்சி.
வேலை நிறுத்தம்
கேரளாவில் மீன்பிடி உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதை கண்டித்து மாநில மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோவளம், கொல்லம், ஆலப்புழை, திருச்சூர் உள்பட கேரளா முழுவதும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், படகுகளை கரையில் நிறுத்தி வைத்து இருந்தனர்.

ரத்து செய்ய வேண்டும்

இதுகுறித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறியதாவது:-
ஆழ்கடல் மீன் பிடித்தல் என்ற பெயரில் கேரளாவில் மீன்பிடி உரிமையை அமெரிக்க நிறுவனமாக இ.எம்.சி.சி.க்கு மாநில அரசு குத்தகைக்கு விட முடிவு செய்து உள்ளது. இது கேரள மீனவர்களின் நலனை புறக்கணிக்கும் செயல் ஆகும். கேரள கடலோர மீனவர்கள் பாதுகாப்பு சட்டத்தில் மீன் பிடித்தல், மீன் விற்பனை, மீன் தரக்கட்டுப்பாடு ஆகியவை தொடர்பாக திருத்தம் செய்து, மீனவர்களின் உரிமையை மாநில அரசு பறித்து வருகிறது. இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அந்த சட்ட திருத்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்