பெங்களூரு பூங்காவில் சுதந்திரத்துக்கு முன் இயங்கிய நீராவி ரெயில் என்ஜின்; பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்

இந்திய ரெயில்வேயில் சுதந்திரத்திற்கு முன் இயக்கப்பட்ட நீராவி ரெயில் என்ஜின், தற்போது பெங்களூரு இந்திரா காந்தி இசை நீரூற்று பூங்காவில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.;

Update:2021-02-28 20:47 IST
நீராவி ரெயில் என்ஜினை இளம்பெண்கள் பார்வையிட்ட காட்சி.
பெங்களூரு: இந்திய ரெயில்வேயில் சுதந்திரத்திற்கு முன் இயக்கப்பட்ட நீராவி ரெயில் என்ஜின், தற்போது பெங்களூரு இந்திரா காந்தி இசை நீரூற்று பூங்காவில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள். 

நீராவி என்ஜின்

சுதந்திரத்திற்கு முன் 1851 முதல் 1940 வரை இந்தியாவில் நீராவி என்ஜின் ரெயில்வே துறையில் பிராட்கேஜ் மற்றும் மீட்டர் கேஜ் ரெயில், ரெயில் பாதைகளில் நீராவி என்ஜின்கள் இயக்கப்பட்டன. 

இந்தியாவில் மீட்டர் கேஜ் மற்றும் பிராட் கேஜ் ரெயில் பாதைகளில் ரெயில் சேவை இயங்கி வந்ததால் இரு ரெயில் பாதைகளிலும் சமயத்திற்கு ஏற்ப இயங்கும் வகையில்  நவீன வகை நீராவி என்ஜின் தயாரானது. 1959-ம் ஆண்டு "2-8-2" வகை 8 சக்கரங்கள் கொண்ட இந்த நீராவி என்ஜின், ஜப்பான நாட்டின் நிப்பான் ஷேரியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். 812 என்.எச்-5  ரக சிறப்பு என்ஜினை அப்போதைய இந்திய ரெயில்வே நிர்வாகம் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்தது. பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய வகை நீராவி என்ஜின்  நாட்டில் பரவலாக பேசப்பட்டது. 

மலை-தாழ்வான பாதையில்...

அதாவது, மலை பாதை, தாழ்வான பாதை மட்டும் இன்றி மழை, வெயில் போன்ற சீதோஷ்ண நிலையில் நிலக்கரி மற்றும் தண்ணீர் போன்றவை அதிக அளவில் செலவாகமல் சிக்கனமாக பயன்படுத்தி இயங்கும் வகையில் இந்த நீராவி என்ஜின் வடிவமைக்கப்பட்டது. 

என்ஜினின் சக்கரங்கள் சுலபமாக இயங்க வசதியாக இரும்பு பேரிங்குகளுக்கு பதில் செம்பு தூள் மற்றும் மரத்தூள்களில் ரசாயனக் கலவை சேர்த்து பேரிங்குகள் தயாரிக்கப்பட்டு சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வகை பேரிங்குகள் நீண்ட காலத்திற்கு சேதம் இன்றி இயங்கியதால் நீராவி என்ஜின் பல வருடங்கள் ரெயில் சேவைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரிய அளவில் சக்கரங்கள் பயன்படுத்தியதால் நீண்ட தூரத்திற்கு வேகமாக பயணிக்கும் வசதி பெற்றிருந்தது. 

ஐ.ஏ.எஸ். அதிகாரி விளக்கம்

இந்த அறியவகை நீராவி என்ஜின் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரகுநந்தன் கூறுகையில், ‘‘ இந்த நீராவின் என்ஜின் இரண்டு அடி ரெயில் பாதையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு குவாலியரில் முதன் முதலாக சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட தூரம் பயணிக்கும் போது பழுதடையாமல் இருக்கும் வகையில் என்ஜினில் சிறப்பான தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்த நீராவி என்ஜின் பழுதடையாமல் இருக்க ரெட் ஆக்சைட் பூசப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பழைய நீராவி என்ஜின்  என்பதால் இது குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி இசை நீரூற்று பூங்காவில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்