கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா
கொரோனா பாதிப்பில் இருந்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குணமடைந்துள்ளார்.;
புதுடெல்லி,
கடந்த மாதம் 13ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து நட்டா குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டி எனக்காக பிரார்த்தனை செய்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் இப்போது கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளோம். இந்த சவாலான காலங்களில் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் அவரது குழுவினருக்கு நாங்கள் முழு மனதுடன் நன்றி கூறுகிறோம்’.என ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.