தெலுங்கானாவில் சாலை விபத்து: 5 பேர் பலி
தெலுங்கானாவில் வளைவில் திரும்பிய கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கோபனபள்ளி என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த கார் சாலையின் வளைவில் திரும்பியபொழுது, எதிரே வந்த லாரி ஒன்று அதன் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். லாரி ஓட்டுனர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.