ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்பு முகமைகள் பெரிய சேவையை செய்து வருகின்றன - அஜித் தோவல்

ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்பு முகமைகள் பெரிய சேவையை செய்து வருகின்றன என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.

Update: 2020-12-09 23:59 GMT
புதுடெல்லி, 

நாட்டில் சிறப்பான பணிக்காக 34 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில், ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு இந்த பதக்கம் வழங்கும் விழா சர்வதேச ஊழல் தடுப்பு தினமான நேற்று டெல்லியில் நடந்தது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டு 34 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி போலீஸ் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

விழாவில் அவர் பேசுகையில், பொருளாதார ரீதியாக சர்வதேசமயமாக்கப்பட்ட இந்த உலகில் அதிகரித்து வரும் குற்றங்கள் புதிய பரிணாமத்தை எட்டி உள்ளன. குறிப்பாக பொருளாதார குற்றங்கள். சர்வதேச ஒத்துழைப்புடன் அவற்றை ஒடுக்குவது அவசியம். ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்பு முகமைகள் பெரிய சேவையை செய்து வருகின்றன என்றார்.

மேலும் செய்திகள்