கேரளாவில் இன்று மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது
திருவனந்தபுரம்,
இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் இன்று மேலும் 6,920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில்இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,66,567 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1,613 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 7,699 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,80,650 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 84,087 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.