மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து : குடியிருப்பு கட்டிடத்திலிருந்து 3500 பேர் வெளியேற்றம்

மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது தீ அருகே குடியிருப்பு பகுதிக்கும் பரவியதால் அங்கிருந்து 3,500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

Update: 2020-10-23 04:37 GMT
மும்பை

தெற்கு மும்பையில் நேற்று இரவு சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த வளாகத்தில் இருந்து 250-300 பேர்  மீட்கப்பட்டனர் அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தீயணைக்கும் பணியில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டன.அதில் ஒரு தீயணைப்பு வீரருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, உடனடியாக அவர் ஜே.ஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வணிக வளாகத்திற்குள் யாரும் இல்லை.

தீ மள மள வென பக்கத்தில் இருந்த குடியிருப்புகளுக்கும் பரவியது இதனால் பக்கத்து குடியிருப்புகளில் இருந்த 3500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் செய்திகள்