ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு ஆதெய்யா மரணம்

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு ஆதெய்யா நேற்று மரணமடைந்தார்.

Update: 2020-10-15 19:30 GMT
மும்பை, 

மும்பையை சேர்ந்த பழம்பெரும் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா. பல ஆண்டுகளாக நோய்வாய்பட்டு இருந்தநிலையில் நேற்று காலை மும்பையில் உள்ள வீட்டில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

1956-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. திரைப்படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமான இவர் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். 1990-ம் ஆண்டு வெளியான ‘லெக்கின்’, 2001-ம் ஆண்டு வந்த ‘லகான்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதையும், 1983-ம் ஆண்டு ரிச்சர்ட் அட்டென்பரோ இயக்கிய ‘காந்தி’ என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றிருந்தார்.

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்