ஒடிசாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை - தர்மேந்திர பிரதான்
ஒடிசாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு குறித்து மூத்த மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
புவனேஷ்வர்,
ஒடிசாவில் புதிதாக 3,326 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,32,713-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஒடிசாவில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சோதனை மற்றும் சுகாதார நெறிமுறைகள் பற்றி மூத்த மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எய்ம்ஸ், ஐசிஎம்ஆர் போன்ற நிறுவனங்கள் மாநில அரசுடன் முழு ஒத்துழைப்பை அளிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.