அக்.3-ம் தேதி ராகுல்காந்தி கிசான் யாத்ரா மேற்கொள்வார் - கே.சி.வேணுகோபால் அறிவிப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அக்.3-ம் தேதி கிசான் யாத்ரா மேற்கொள்வார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைக் பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல்காந்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக இருவரையும் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். ராகுல்காந்தி கைது சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற கார் பந்தய அரங்கின் விருந்தினர் இல்லத்துக்கு அவர்களை அழைத்து சென்ற காவல்துறையினர் பிறகு அவர்களை விடுதலை செய்தனர். இதன் பின்னர் அவர்கள் இருவரும் டெல்லிக்கு சென்றனர்.
இந்நிலையில் அக்.3 முதல் ராகுல்காந்தி கிசான் யாத்ரா மேற்கொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அக்டோபர் 3-ம் தேதி பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல்காந்தி கிசான் யாத்ரா என்ற பயணத்தை மேற்கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.