காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், “ நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள், தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.